இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலையை சீராக்க அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எம்.எஃப் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில், பாஜக ஆட்சிக்கு வந்த2014 முதலே நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் 2019-20 நிதியாண்டில், கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவுஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், ஐ.எம்.எஃப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் பொருளாதார நிலை அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலையை சீராக்க அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எம்.எஃப் அறிவுறுத்தியுள்ளது. நுகர்வு மற்றும் முதலீடு குறைந்து வருவது மற்றும் வரிவருவாய் வீழ்ச்சி ஆகியவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு தடையாக இருக்கும் காரணிகள் என்று ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.